அரியலூரில் காதல் ஜோடி தற்கொலை – சோகத்தில் மூழ்கிய கிராமம்!
In Ariyalur a couple committed suicide a village submerged in sorrow
ஒரே நாளில் காதலியும், காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்யுள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தென்கச்சி பெருமாள்நத்தத்தைச் சேர்ந்த யுவராஜ் (22), சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுமத்ரா (18) ஆகியோர் காதலித்து வந்தனர். சுமத்ரா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்சி. ரேடியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சுமத்ரா தனது தோழிகளுடன் உணவு அருந்திவிட்டு ஒன்றாக சேர்ந்து தூங்கியுள்ளார். நள்ளிரவு நேற்று முன்தினம் நள்ளிரவு, சுமத்ரா தனது வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். சுமத்ராவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமத்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையறிந்த யுவராஜ், மனவேதனையில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் காதலியும் காதலனும் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இருவரும் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், யுவராஜும், சுமத்ராவும் காதலித்து வந்தது தெரியவந்தது.
English Summary
In Ariyalur a couple committed suicide a village submerged in sorrow