திருமணமான மூன்று மாதங்களில் கணவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்ற மனைவி.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


திருமணமானது வெறும் மூன்று மாதங்கள் தான். ஆனால், மனைவி ,கணவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்ற சம்பவம், கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் அருகே உள்ள கிருஷ்ணா ஆற்றுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்,தாதப்பா (29) – கூலி தொழிலாளி,யாதகிரி மாவட்டம் வடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர்,கந்தம்மா (27) – இவர்கள் ஏப்ரல் 10, 2025 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று காலை, இந்த தம்பதிகள் ராய்ச்சூர் புறநகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் பாலத்திற்கு சென்றனர். இயற்கையை ரசிக்கவும், செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கவும் முடிவு செய்தனர்.

முதலில் கந்தம்மா தடுப்புச்சுவரில் நின்று புகைப்படம் எடுத்தார். பின்னர் தாதப்பாவும் தடுப்புச்சுவரில் நின்றபோது, திடீரென மனைவி அவரை ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

அவர் ஆற்றில் விழுந்தபோதும், நீச்சல் தெரிந்ததால், நடு ஆற்றில் உள்ள பாறையொன்றில் தஞ்சம் அடைந்தார். ஆனால் வெள்ளப் பெருக்கால் கரையை நோக்கி swimming செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தாதப்பாவின் கூக்குரலைக் கேட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கயிறு கொண்டு அவரை மீட்டனர். ஆனால் இதற்குப் பின்னர், தம்பதிகள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது தாதப்பா: “என்னை மனைவி திட்டமிட்டு தள்ளி கொல்ல முயன்றார்”என கூறினார்.ஆனால் கந்தம்மா: “அவர் கால் தவறி விழுந்தார்; என்னை தவறாகக் குற்றம் சாட்டுகிறார் என கூறினார் ”

இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது தாதப்பா எழுப்பிய புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எதற்காக மனைவி கணவரை தள்ள முயன்றார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In a shocking incident in Karnataka a wife attempted to push her husband into the river and kill him within three months of their marriage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->