#BigBreaking | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியது - தமிழகத்தில் மிக கனமழைக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.

இந்த நிலையில், இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததது.

இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD weather report 09112022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->