உஷாரா இல்லன்னா இப்படித்தான்! ஷூ வில் இருந்த பாம்பு...! கவலைக்கிடமான நிலையில் சிறுவன்...!
If you dont be careful this what happen snake shoe boy critical condition
கடலூரில் திட்டக்குடி அடுத்த இருக்கும் தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் 12 வயதான மகன் 'கவுஷிக்'.இவர் ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன்.இதனிடையே,இன்று காலை எப்போவும் போல சிறுவன் பள்ளிக்கு செல்ல ready -ஆகும் போது வீட்டில் ஷூ அணிந்துள்ளார்.

அப்போது அதில் ஒளிந்திருந்த சிறிய பாம்பு ஒன்று சிறுவனை கொத்தி விட்டது.இதில் விஷம் ஏறிய சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து சிறுவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதல் சிகிச்சை பெட்ரா பிறகு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராமநத்தம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
If you dont be careful this what happen snake shoe boy critical condition