இ-பாஸ் முறையை ரத்து செய்யவில்லை என்றால் போராட்டம் செய்வோம் - ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தினால் சுற்றுலா தளமான ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தியது. எத்தனை வாகனங்கள் எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர முடியும். நீலகிரி மாவட்டத்தில் 16 சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவதாக காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

 இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காட்டேஜ் உரிமையாளர் சங்கத் தலைவர் பிரபு பேசுகையில், இ பாஸ் நடைமுறையால் இரண்டு நாட்களாக பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜிகள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இபாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒரு நாள் முன் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If epass system is not cancelled we will protest Ooty Cottage Owners Association Notice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->