பாஜகவைத் திட்டுனா உங்களுக்கு ஏன்டா நோவுது? - இடும்பாவனம் கார்த்திக்! - Seithipunal
Seithipunal


இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக, நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இடும்பாவனம் கார்த்திக் அனல் பறக்க பேசினார்.

அவரின் பேச்சு, தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருந்ததாக உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி புகார் அளித்தார். 

புகாரின் பேரில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தன் மீது வழக்கு போட்ட தமிழக அரசுக்கும், வரம்பு மீறி செய்தி வெளியிட்ட செய்தி ஊடகம் ஒன்றுக்கும் இடும்பாவனம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், "நான் உக்கடத்தில் உக்கிரமாகப் பேசித்தான், திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடந்ததா நியாயமாரே? முதல்வர் ஸ்டாலின்"

வழக்குப் போட்ட உங்களுக்குத் துணிவு, திராணி இருந்தா நான் பேசுன காணொளிய வெளிய போடுங்க! பாப்போம்!
பாபர் மசூதிய இடிச்ச பாஜகவைத் திட்டுனா உங்களுக்கு ஏன்டா நோவுது?

இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாகக்கூறி, என் மீது கோவை, உக்கடத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருக்கிறது திமுக அரசு.  நான் பேசியது பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து; முழுக்க முழுக்க பாஜகவை! 

அதுசரி! பாஜகவைப் பேசினா திமுகவுக்கு ஏன் வலிக்குது?" என்று இடும்பாவனம் கார்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

idumbavanam karthi reply to DMK Govt


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->