விழுப்புரம் : வேறொருவருடன் வாழும் மனைவி - போஸ்டர் ஒட்டி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கணவன்.! - Seithipunal
Seithipunal


வேறொருவருடன் வாழும் மனைவி - போஸ்டர் ஒட்டி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கணவன்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும் கோலியனூர் பகுதியைச்  சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால், கணவன்,  மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜி, கடந்த 2021-ம் ஆண்டு வெங்கடேசனை பிரிந்துசென்று கோலியனூரைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே வெங்கடேசன் மனைவி விஜி மீது குற்றம்சாட்டி கோலியனூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் தன் திருமணத்தின்போது விஜியுடன் எடுத்த புகைப்படங்களையும், ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை வைத்து முக்கிய அறிவிப்பு என்று போஸ்டர் ஒன்றை தயாரித்து ஒட்டியுள்ளார்.

அந்தப் போஸ்டரில், "முக்கிய அறிவிப்பு, என்னுடன் வாழ்ந்து வந்த விஜி, இருபது பவுன் நகை, பதினைந்து லட்சம் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று மற்றொருவருடன் வாழ்ந்து வருகிறார் என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போஸ்டரை பார்த்த பலரும் விஜியிடம் விசாரித்துள்ளனர். 

இதனால், மனவேதனைக்கு உள்ளான விஜி வளவனூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband stick poster against wife in vilupuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->