சிவகங்கை : கார் கவிழ்ந்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியை சேர்ந்தவர் உதய அரசன். இவருடைய மனைவி மேனஸ்கா. இவர்கள் இரண்டு பேரும் தங்களது இரண்டு வயது மகனுடன் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பத்தூர் அருகே சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்பு சாலையை விட்டு விலகிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்த விபத்தில் பயணம் செய்த கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று பேரையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband and wife luckily survived the car overturn accident in sivagangai


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->