நிசான் ‘கிராவிட்’ சப்-4 மீட்டர் எம்பிவி ஜனவரி 21ல் அறிமுகம்; 2026 மார்சில் விற்பனைக்கு வர வாய்ப்பு! விலை எவ்வளவு தெரியுமா?
Nissan Gravit sub 4 meter MPV to be launched on January 21 likely to go on sale in March 2026 Do you know how much it will cost
நிசான் இந்தியா நிறுவனம், தனது புதிய சப்-4 மீட்டர் எம்பிவி மாடலான கிராவிட் (Gravite)-ஐ வரும் ஜனவரி 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதத்தில் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வரிசை இருக்கை வசதியுடன் கூடிய, குறைந்த விலையிலான குடும்பக் காரைத் தேடும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, இந்த மாடலை நிசான் நிலைநிறுத்தியுள்ளது.
நிசான் கிராவிட், அடிப்படையில் Renault Triber மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். அதே பிளாட்ஃபார்ம், பவர்டிரெய்ன் மற்றும் சில அம்சங்களை பகிர்ந்துகொண்டாலும், நிசானுக்கே உரிய தனித்துவமான வடிவமைப்பு மாற்றங்கள் இதில் இடம்பெறும். அறிமுகத்திற்குப் பிறகு, இது ரெனால்ட் டிரைபர் மற்றும் Maruti Ertiga போன்ற பிரபல எம்பிவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்கும்.
வடிவமைப்பைப் பொருத்தவரை, CMF-A பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த எம்பிவியில், தலைகீழ் எல்-வடிவ டிஆர்எல்-களுடன் புதிய கிரில், சில்வர் இன்செர்ட்களுடன் ஸ்போர்ட்டி முன்பம்பர், புதிய அலாய் வீல்கள் மற்றும் ‘Gravite’ பேட்ஜிங்குடன் மறுவடிவமைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் இடம்பெறும். அதே நேரத்தில், ஹெட்லெம்ப்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் ORVM-கள் போன்ற சில பகுதிகள் டிரைபருடன் ஒத்ததாக இருக்கும்.
இன்ஜின் பகுதியில், ரெனால்ட் டிரைபரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் நெச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இதிலும் வழங்கப்படும். இந்த இன்ஜின் 72 bhp பவர் மற்றும் 96 Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும், சிறந்த டிரைவிங் அனுபவத்திற்காக இந்த இன்ஜினை நிசான் சிறிய அளவில் ரீ-டியூன் செய்யலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT (ஆட்டோமேட்டெட் மேனுவல்) கியர்பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற பயன்பாடு மற்றும் குடும்பப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் இந்த அமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
உள்துறை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், ரெனால்ட் டிரைபரைப் போல நெகிழ்வான இருக்கை அமைப்பு, 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 7-இன்ச் TFT கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு குளோவ் பாக்ஸ் மற்றும் ஆட்டோ-ஃபோல்டு ORVM-கள் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில், மூன்று வரிசை இருக்கை வசதியுடன் வரும் இந்த எம்பிவி, குடும்பக் கார் பிரிவில் நிசானுக்கு முக்கிய மாடலாக அமையக்கூடும்.
English Summary
Nissan Gravit sub 4 meter MPV to be launched on January 21 likely to go on sale in March 2026 Do you know how much it will cost