பன்னி மூஞ்சா? என்னை ஏன் திட்டுறீங்க..? அது நான் இல்லை... தேமுதிக நிர்வாகிக்கு விளக்கம் கொடுத்த தவெக லயோலா மணி!
TVK Loyola mani DMDK Parthasarathi
தேமுதிக மாநாட்டில் பேசிய அக்கட்சி நிர்வாகி பார்த்தசாரதி, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்புக்கிற்கு பதிலாக, தவெக நிர்வாகி லயோலா மணியை திட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், தவெக லயோலா மணி விடுத்துள்ள விளக்கத்தில், "மரியாதைக்குரிய அண்ணன் பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்.என்னை ஏன் திட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் திட்ட வேண்டிய ஆள் வேறு அண்ணா. கருத்து கணிப்பு எடுத்தவர்கள் IPDS அமைப்பைச் சார்ந்தவர்கள்.அதன் நிறுவனர் திருநாவுக்கரசு(லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்)
கோவத்தில் ஆள் மாத்தி திட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அண்ணா..
தவறாக புரிந்து கொள்ள கூடாது என்ற புரிதலுக்காக இந்த பதிவை பதிவு செய்துள்ளேன்.
கேப்டன் அவர்களின் மீது மிகுந்த அன்பும்,மரியாதையும் கொண்டவன் நான். மிகச் சிறந்த மனிதநேயர் கேப்டன் அவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Loyola mani DMDK Parthasarathi