இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர்: கோலி, ரோகித், கில் சதம் அடிப்பார்கள் – இர்பான் பதான் கணிப்பு - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி வடோதரா நகரில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் விளையாட இருப்பதால், தொடரின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடரை யார் கைப்பற்றுவார்கள், எந்த வீரர்கள் அதிக ரன்களை குவிப்பார்கள் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்பான் பதான் இந்த தொடரை குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் சதம் அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார். சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்ததை அவர் நினைவூட்டினார்.

மேலும், காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிட்ட சுப்மன் கில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், தனது திறமையை வெளிப்படுத்த அவர் முயற்சிப்பார் என்றும், இந்த தொடரில் கிலும் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்த கணிப்புகள் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் மிகுந்த பரபரப்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India New Zealand ODI series Kohli Rohit Gill will score centuries Irfan Pathan prediction


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->