ஓசூர்–கிருஷ்ணகிரி சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!
hosur big road accident
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற பெரும் சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.
இவ்விபத்து ஓசூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் சிக்காரிமேடு பகுதியில் இன்று நடந்தது. சரக்கு லாரிகள், அரசு பேருந்து மற்றும் சில கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மோதல் தாக்கம் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த உடனேயே கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
சூளகிரி போலீசார் விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினர். மேலும் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.
தற்போதைய தகவலின்படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.