தூத்துக்குடியில் கோர விபத்து! பைக் மீது மோதிய 40 அடி கண்டெய்னர் லாரி....வாலிபர் பலி...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் பைக்கில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் மீது 40 அடி கண்டெய்னர் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுமானப் பணிக்காக தூத்துக்குடியில் தங்கியிருந்த இளைஞருக்கு நேர்ந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மேதினிபூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்தாஸ் மகன் கோகன்தாஸ் (28). தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானக் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதற்காக கடந்த ஒரு மாதமாக அங்கேயே தங்கியிருந்தார்.இன்று கோகன்தாஸ் முத்தையாபுரம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் தெர்மல்நகர் விலக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த 40 அடி கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கோகன்தாஸ் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது.

லாரியின் வேகமான மோதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோகன்தாஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தெர்மல்நகர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உயிரிழந்த கோகன்தாஸின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து தொடர்பாக தூத்துக்குடி முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜீவ்காந்தி (34) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுமானப் பணிக்காக தூத்துக்குடி வந்திருந்த மேற்கு வங்க இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம், அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrible accident Thoothukudi 40 foot container lorry hit bike teenager died What happened


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->