கெளரவ ஊதியம் ரூ. 10,000த்தில் இருந்து ரூ. 25,000 மாக உயர்வு.. மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்!  - Seithipunal
Seithipunal


அங்கன்வாடி பயிற்சியாளர்களுக்கு கெளரவ ஊதியம் ரூ. 10,000த்தில் இருந்து ரூ. 25,000 மாக உயர்த்தி வழங்க முதலமைச்சர்  ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் நலதிட்டத்தின் மாநில திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலதிட்டத்தின் மாநில திட்ட வழிகாட்டுதல் குழு(SMSG) கூட்டம்  முதலமைச்சர்  ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில்  நடைபெற்றது. நல அமைச்சர் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சார்புச் செயலர் (நிதி) ரத்னகோஷ் கிஷோர் சௌரே, மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் செல்வி முத்துமீனா மற்றும் குழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்காணும் பல்வேறு முக்கியமுடிவுகள்எடுக்கப்பட்டன.தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இணை உணவினை, மத்திய அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின் படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல் மாதம் இருமுறை  சத்துமாவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நகர்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.3250 யில் இருந்து ரூ.6000 மாக  உயர்த்தவும், கிராமப்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.1750 யில் இருந்து ரூ.2000 மாக  உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சத்துமிக்க சிறுதானிய பிஸ்கட் மற்றும் பருவகால பழங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுரவ அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.6000த்தில் இருந்து ரூ. 12,௦௦௦ மாகவும் உதவியாளர்களுக்கு ரூ.4000த்தில் இருந்து ரூ. 10,௦௦௦ மாகவும்  உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காய்கறி மற்றும் எரிவாயு தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி பயிற்சியாளர்களுக்கு கெளரவ ஊதியம் ரூ. 10,000த்தில் இருந்து ரூ. 25,000 மாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Honorarium increased from Rs 1000 to Rs 25000 Approval from the State Scheme Guidance Committee


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->