ஆடிப்பெருக்கு விழா - எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை.?  - Seithipunal
Seithipunal


ஆடிப்பெருக்கு விழா - எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை.? 

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு  தினமாக தமிழக மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த 18 அன்று விவசாயிகள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரி அன்னைக்கு பழங்கள், பூ உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள். 

அந்த வகையில், இந்த வருடத்திற்கான ஆடிப்பெருக்கு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். 

ஆனால், ஆடி பெருக்கு என்றாலே டெல்டா பகுதியில் காவிரியில் புரண்டோடும் புதுவெள்ளமும், அதற்கு ஈடாக  ஆற்றங்கரைகளில் கூடும் ஆயிரக் கணக்கான புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டவர்கள்தான் நினைவிற்கு வருவார்கள்.

இருப்பினும், திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு தினத்திற்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

holiday to dharmapuri district for adi perukku


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->