ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்! பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துவிட்டது: 

தர்மபுரி மாவட்டம்: தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக பெண்ணாகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் விளங்குகிறது. 

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலம், வெளி மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

ஒகேனக்கலில் இன்று காலை நீர்வரத்து நிலவரப்படி 400 கன அடியாக தண்ணீர் குறைந்தது. விடுமுறை நாளான இன்று ஒகேனக்கலில் அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்து விட்டது.

விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள் | holiday echo  tourists enjoyed in Hogenakkal

அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்து, அருவிகளில் குளித்தும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தொங்கும் பாலத்தில் நின்று கொண்டு பார்த்து ரசித்தனர்.

மேலும் மசாஜ் செய்து கொள்வது மெயின் அருவி மற்றும் சீனி அருவி போன்ற அருவிகளில் குளித்து மகிழ்வதும், பிரசித்தி பெற்ற மீன்களை வாங்கி சமைத்து ருசித்தும் விடுமுறை நாளை ஆனந்தமாக கழிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hogenakkal tourists enjoyed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->