பட்டாகத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய முக்கிய புள்ளி கைது!!
Hindu Eruchi Peravai executive arrested in Thanjavur
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சாய்ரகு தஞ்சாவூர் மாநகர் மாவட்ட தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி இரவு அவருடைய கட்சி அலுவலகத்தில் தனது பிறந்த நாளை கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் பட்டாகத்தியால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தஞ்சை தாலுகா போலீசார் சாய்ரகு மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இந்து எழுச்சி பேரவையின் மாவட்ட தலைவர் சாய்ரகு சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Hindu Eruchi Peravai executive arrested in Thanjavur