மதுரை விமான நிலையம் " சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுவதில் ஏன் இவ்வளவு குளறுபடி!
Highly Confusions In Madurai Airport Becoming An International Airport
தமிழகத்தில் 1957ல் நிறுவப்பட்ட மதுரை விமான நிலையம், சென்னை, திருச்சி ,கோவைக்கு அடுத்து நான்காவது பெரிய விமான நிலையம் ஆகும். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி அமைக்க சுமார் 25 ஆண்டுகளாக பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. .
பணியாளர்கள் குறைவின் காரணமாக 24 மணி நேரமும் செயல்பட இயலாத நிலையில் இருந்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய பட்டியலில் சேர்க்க இடையூறு ஏற்பட்டது.
தொடர்ந்து நாள் முழுக்க செயல்பட்டால் மட்டுமே சர்வதேச விமான நிலைய அங்கீகாரகத்தை அடைய முடியும் என்று அரசின் தரப்பில் இருந்து திட்டவட்டமாக கூறிய பிறகு ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது.ஆனால் தொடர்ந்து சரிவர செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மக்களவையில் அழுத்தம் கொடுத்து யாரும் பேசவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டு எழுந்தது.
2009 ஆம் ஆண்டு மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி பல நாள் போராட்டத்திற்கு பின்பு இந்த ஆண்டு தான் நிறைவு பெற்றது.

விமான நிலையத்தின் ஓடு பாதையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே பெரிய ரக விமானங்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் இலகுவாக வந்து செல்ல முடியும். விமான நிலையத்தின் ஓடுபாதை 7,500அடி உள்ளது. இதை 12,500 ஆக உயர்த்தவே திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஓடுபாதை விரிவாக்க திட்டத்தில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த பிறகும் மதுரையில் 'அன்டர் பாஸ் ரான்வே' திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முன் வரவில்லை.
‘அன்டர் பாஸ் ரன்வே’ இல்லாமல் மாற்று வழிப்பாதைத் திட்டம் அமைக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தி, அதில் நான்குவழிச்சாலை போட்டு விமானநிலைய ஓடுபாதையை விரிவுபடுத்த இன்னும் 10 ஆண்டுகளாகும். இதற்க்கு 10 ஆண்டுகள் ஆகும்.
மதுரையில் ‘எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து விமானநிலைய ஓடுபாதைத் திட்டத்திலும் மத்திய, மாநில அரசுகள் இடையே நீடிக்கும் பிடிவாதம், மோதல் போக்கால் மதுரையின் வளர்ச்சி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்
English Summary
Highly Confusions In Madurai Airport Becoming An International Airport