ஜெயலலிதா மரணம்... சசிகலாவுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் முக்கிய உண்மை தகவல்களை சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனையும் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சுகாதார துறை முன்னாள் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோரும் தகவல்களை மறைத்தார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பான விசாரணை நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் தற்போதைய அரசு பிளீடர் முத்துகுமார் ஆகியோர், விசாரணை ஆணைய சட்டப்படி, ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும், நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும்படி கோர முடியாது தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court order to against case sasikala of jeyalalitha death


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதுAdvertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது
Seithipunal
--> -->