சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை.!
Heavy rain in Chennai since morning
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுந்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில் கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை சென்ட்ரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
மேலும் சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
English Summary
Heavy rain in Chennai since morning