மழை வெளுத்து வாங்குது... காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை..! ஒகேனக்கல் நீர்வரத்து எவ்வளவு கனஅடியாக உயர்ந்துள்ளது...?
Heavy rain Cauvery catchment areas How much water level Hogenakkal increased
கடந்த சில நாட்களாக, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கனகபுரா, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து ஓடுகிறது.ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் செந்நிற கலந்த வெள்ளநீர் ஆக்ரோஷமாக கொட்டியது.
அருவிகளின் சீற்றம் சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த நீர்வரத்தை, காவிரி நுழைவுப்பகுதியான தமிழக–கர்நாடக எல்லை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளிலும் காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து இயற்கை எழிலை ரசித்தனர்.
English Summary
Heavy rain Cauvery catchment areas How much water level Hogenakkal increased