வெயில் கொடுமை தாங்கல...எனக்கும் ஒன்னு கொடு...! - பெண்ணிடம் ஐஸ்கிரீமை பிடுங்கி 'ஜில்'லென்று ருசி பார்த்த குரங்கு...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே தினத்தையும் தொடர்ந்து வந்த சனி, ஞாயிறு விடுமுறைகளையும் முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர்.

இந்த சூழலில், அங்குள்ள குரங்குகளின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பயணிகளை சிரிப்பிலும் சற்றே பதட்டத்திலும் ஆழ்த்தி வருகிறது.இந்நிலையில் இன்று (மே 3), ஒரு சுற்றுலா மையத்தில் பெண் ஒருவர் ஐஸ்கிரீம் சுவைத்தபடி நடைப்பயணம் மேற்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எச்சரிக்கையின்றி தோன்றிய குரங்கு ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து, அவரது கையில் இருந்த ஐஸ்கிரீமை பறிக்க முயன்றது. திடீர் தாக்குதலால் பதற்றமடைந்த அந்த பெண், ஐஸ்கிரீமை கீழே விட நேர்ந்தது.

அதைச் சாதகமாக்கிக் கொண்ட குரங்கு, தரையில் விழுந்த ஐஸ்கிரீமை எடுத்து மக்களின் முன்னிலையிலேயே சுவைத்தது. இந்த காட்சியை அங்கு இருந்த சிலர் தங்களது கைபேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருவதுடன், குரங்கின் தந்திரமான செயல்பாடு பலரிடமும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heat unbearable give me one too monkey who snatched ice cream from woman and tasted it said Jill


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->