நெஞ்சம் பதறும் கொடூரம்...! அக்கா கணவரின் அத்துமீறல்...! - காவல் நிலையத்தில் விஷம் குடித்துவிட்டு புகார் அளித்த சிறுமி...!
Heart wrenching cruelty Sister husband violation Girl who drank poison and filed complaint police station
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், விநாயகபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த இளைஞருடன் தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றும், விரைவில் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை தனது காதலனிடம் சிறுமி தெரிவித்த நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சிறுமி செல்போன் பயன்படுத்துவதற்கும் வெளியே செல்வதற்கும் பெற்றோர் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த சிறுமி, நேற்று விஷம் அருந்திய நிலையில் நேரடியாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவலர் நிலையத்துக்குச் சென்றார்.
அங்கு காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அக்காள் கணவர் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ள முயன்றதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே விஷம் அருந்தியதாகவும் சிறுமி தெரிவித்தார்.
இந்த தகவலை கேட்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக சிறுமியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், ஆத்தூர் அனைத்து மகளிர் காவலர் நிலையத்திற்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் புகாரின் அடிப்படையில், ராசிபுரம் தாலுகா சீராப்பள்ளியைச் சேர்ந்த அவரது அக்காள் கணவர் சதாசிவம் மீது அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Heart wrenching cruelty Sister husband violation Girl who drank poison and filed complaint police station