போலி அனுபவ சான்றிதழ், நிர்வாக முறைகேடு விவகாரம்: சேலம் பெரியார் பல்கலையில் தமிழ்த்துறை தலைவர் பதவி நீக்கம்: நிர்வாகக் குழுவினர் அதிரடி நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்த பெரியசாமி, போலி அனுபவ சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது மற்றும் நிர்வாகத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவரது துறைத்தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், . தங்களை முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விடாமல் அவர், தடுத்ததாக, தமிழ்த்துறையில் பி.எச்டி., ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள் புகார் அளித்தனர். அதிலும், 19 முனைவர் பட்ட ஆய்வாளர்களை பயில விடாமல் செய்தது, சாதி பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியது, அலுவல் நிலை பணியாளர்களைத் தரக்குறைவாக பேசியது, பேராசிரியர்களை நாகரிகமற்ற முறையில் திட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பெரியசாமி மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த பட்டதை அடுத்து, விசாரணை நடத்த, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் மணியன் தலைமையில், 03 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இக்குழுவினர், புகார் தெரிவித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, அவர்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்த நிலையில், பேராசிரியர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழு பரிந்துரையின் அடிப்படையில் பேராசிரியர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Head of Tamil Department at Salem Periyar University suspended


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->