ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய எச்.ராஜா.. ட்விட்டரை தெறிக்கவிட்ட சம்பவங்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான மலரை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர். 

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பது தந்தைக்குரிய பதவியாகும். இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து செய்து வரும் துக்ளக் இதழை சிறப்பாக செயல்படுத்தி குருமூர்த்தி வருகிறார். சோ மிகச்சிறந்த அறிவாளி ஆவார். அறிவாளியை தேர்ந்தெடுக்கவே பத்திரிகை துறை இருந்து வருகிறது. 

சோ எடுத்த ஆயுதமே துக்ளக். சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். துக்ளக் இதழையும், சோ ராமசாமியையும் பெரிய அளவில் பிரபலமாக்கிய நபர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பகத்வத்சலம். முரசொலியை பொறுத்த வரையில் முரசொலி என்று கூறினாலே திமுக காரன் என்பார்கள். 

துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கூறுவார்கள்.. பெரியாரின் தலைமையில் ராமர் மற்றும் சீதாவின் உருவங்கள் நிர்வாணமாக சாலையில் எருது செல்லப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. இருவரின் சிலைக்கும் செருப்பு மாலையும் போடப்பட்டது என்று பேசினார். இதனை அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

கோயம்புத்தூர் திராவிடர் விடுதலை கலகத்தினை சார்ந்த நேருதாஸ் என்ற நபர், கோயம்புத்தூர் காவல்துறை ஆணையரிடம் மனுவை அளித்துள்ளார். இது தொடர்பான மனுவில், ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறு பரப்பி, பெரியாரின் பேருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பேசியதாகவும், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப்போன்று தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, " இந்துக்கள் யுக யுக மாக வழிபட்டு வரும் தெய்வங்களை இழிவாக பேசிவரும் கூட்டத்திற்கு 1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை கூறினால் கோபம் ஏன் வருகிறது. மிரட்டல் பலிக்காது என்றும், 

ஈ.வெ.ரா வும் திக வரும் ராமபிரான் படத்தினை செருப்பால் அடித்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். எனவே துக்ளக் விழாவில் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் திக, திமுக வின் இந்து விரோத செயல்கள் குறித்து மிகவும் குறைவாகவே கூறியுள்ளார். திகவின் மிரட்டல் பலிக்காது.. 

1971ஜனவரியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் ராமர் படம் அவமதிக்கப்பட்டது மட்டுமல்ல அனைத்து இந்து மத கடவுள்களும் இழிவுபடுத்தப் பட்டனர். 26.1.71 தினமணியில் சேலத்தில் திக ஊர்வலத்தில் இந்து புராணபுருஷர்கள் பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் அட்டைகளை தாங்கிச் சென்றனர் என்கிற செய்தி வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், திருமாவளவன் தனது செய்தியாளர்களிடையே பேட்டியளிக்கும் நேரத்தில், பெரியார் தொடர்பாக ரஜினி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புவதாக தெரிவித்து இருந்தார். இதனை அறிந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், " ஈ.வெ.ரா தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது. இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆமா இவர் தனது சரக்கு மிடுக்கு பேச்சுக்கு ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja speech about rajini thuklak speech in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->