நடிகையை கத்தியால் குத்திய கணவர்..ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் சின்னத்திரை நடிகையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி, அம்பரீஷ் என்பவரை  20 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.  இவரும்   பெங்களூரு அனுமந்தநகர் முனேஷ்வரா லே-அவுட்டில் வசித்து வருகிறார்.இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நடிகை மஞ்சுளா அம்ருததாரா' உள்ளிட்ட சில கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவரும்  ஸ்ருதி தனது குடும்பத்துடன் பெங்களூரு அனுமந்தநகர் முனேஷ்வரா லே-அவுட்டில் வசித்து வருகிறார்.


இதனிடையே, கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு  ஸ்ருதி2 மகள்களையும் அழைத்து கொண்டு  கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் வசித்து வரும் அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.  பின்னர் கடந்த 3-ந்தேதி அம்பரீஷ், ஸ்ருதி இருவரையும் அவர்களது குடும்பத்தினர் சமாதானப்படுத்தினார்கள்.

இதையடுத்து, மீண்டும் கணவர் வீட்டின் மகள்களுடன் சேர்ந்து ஸ்ருதி வாழ தொடங்கினார்.இந்நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் அம்பரீஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டதுடன் , இருவருக்கும் இடையே பணப்பிரச்சினையும் நிலவி வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த அம்பரீஷ், ஸ்ருதியை அடித்து தாக்கியதுடன், கத்தியால் அவரை குத்திக் கொல்ல முயன்றார். இதில், அவருக்கு பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஸ்ருதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்பரீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The actor was stabbed by her husband Do you know why?


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->