பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!!
chief minister mk stalin participate actor kingkong daughter marriage
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர்போன நடிகர்களில் ஒருவர் கிங்காங். நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும், கயல் தேவராஜ், முத்துக்காளை உள்ளிட்ட நடிகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தத் திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கிங்காங் அவர்களின் மகள் கீர்த்தனா - நவீன் தம்பதியினருக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
English Summary
chief minister mk stalin participate actor kingkong daughter marriage