மண்டல அளவிலான வானவில் மன்ற கலந்துரையாடல் கூட்டம். ..அனுபவங்களை பகிந்த நிர்வாகிகள்!
A regional level rainbow forum discussion meeting Administrators sharing their experiences
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலைமாவட்டங்களை கொண்ட வேலூர் மண்டல அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் வேலூரில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ஆம் கல்வியாண்டில்உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டில் இது நான்காவது ஆண்டாக தொடருகிறது.இத் திட்டத்தின் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலைமாவட்டங்களை கொண்ட வேலூர் மண்டல அளவிலான வானவில் மன்றத்தின் கருத்தாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் வேலூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி தலைமை தாங்கி பேசினார். முன்னதாகஇணைஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் அம்பிகா விளக்கவுரையாற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் க.பூபாலன் அவர்கள் கருத்தாளர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் விளையாட்டுகளை செய்து காட்டினார்.அறிவியல் இயக்க வேலூர் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பே.அமுதா, முன்னாள் அறிவியல் இயக்க செயலாளர் முத்து சிலுப்பன், வானவில் மன்ற திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சமூக ஆர்வலர்கள்சுகுமார்,ஆர்.வேல்முருகன், இணை செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். கருத்தாளர்கள், வானவில் மன்ற திட்ட செயல்பாடுகளில் தங்களுடைய அனுபவங்களையும், மேலும் திட்டம் சிறப்போடுஇயங்குவதற்கானஆலோசனைகளையும் வழங்கினார்கள். அறிவியல் இயக்கத்தின் செயல்பாட்டு அறிக்கையினை மண்டல ஒருங்கிணைப்பாளர் அம்பிகா அவர்களிடம் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் ஆகியோர் வழங்கினார்கள்.
English Summary
A regional level rainbow forum discussion meeting Administrators sharing their experiences