அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீடு, மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை..!
GST officials raid Minister I Periyasamys daughters house and son in laws knitting company
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்திலும், அவரது மகள் வீட்டிலும் ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரகநாதன் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த, கே.சிங்காரக்கோட்டை அருகே உள்ள ஒட்டுப்பட்டியில் உள்ளது. குறித்த பின்னலாடை நிறுவனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 8,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இன்று (நவம்பர் 21) ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 10 பேர், இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன், திண்டுக்கல்லில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும், ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 04 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
GST officials raid Minister I Periyasamys daughters house and son in laws knitting company