தமிழகம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்..!
grama sabai meeting in tamilnadu at tomarrow
தமிழகம் முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்..!
நாளை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற பொதுமக்களின் குறைகளை கேட்டறிய குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் தினம், உள்ளாட்சிகள் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் தலைமையில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழி கழிவு மேலாண்மை உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அனைத்து பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமங்களில் இருக்கும் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
grama sabai meeting in tamilnadu at tomarrow