கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்தது எப்படி.? அரசு மருத்துவமனை விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் முகமது மஹீர் என்ற ஒன்றரை வயது குழந்தையை தலையில் ரத்தக் கசிவு இருந்ததால் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்ற ஊசி செலுத்திய இடத்தில் வீக்கம் ஏற்பட்டு மூன்று நாளில் கை அழுகியது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் குழந்தையின் கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மற்றும் பணியில் இருந்த மருத்துவர்கள் தான் காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதனை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் மூன்று பேர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் 4ம் தேதி விசாரணை நடத்தி  ஜூன் 5ஆம் தேதியே விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பித்தது. குழந்தையின் தலையில் பாக்டீரியா தொற்று இருந்ததன் காரணமாக ரத்த ஓட்டம் தடைப்பட்டு கை அகற்றப்பட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. குழந்தை இழந்த பெற்றோர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவரின் தவறான சிகிச்சையை காரணம் என குற்றம் சாட்டி வரும் நிலையில் மருத்துவமனை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு உயர்தர சிகிச்சைகள் அளித்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும், குழந்தையின் தலையில் சூடுனோமோனாஸ் என்ற பாக்டீரியா தொற்று தொடர்ந்து அதிகரித்தது அச்சுக்கள் ரத்தத்தில் கலந்ததால், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நோய்த் தொற்று காரணமாக குழந்தை உயிரிழந்ததுள்ளதாக எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt hospital explained hand removed child death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->