வாடிப்பட்டியில் சோகம்: அறுந்து விழுந்த மின்வயர்... காப்பாற்ற முயன்ற தந்தை-மகன் பலி! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தெத்தூர் நாராயணபுரத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநரும் அவரது தம்பி மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

விபத்து நடந்த விதம்:
இன்று காலை 7:45 மணியளவில், ஆதிநாராயணன் (55) மற்றும் அவரது தம்பி மகன் ஸ்ரீ கிருஷ்ணன் (20) ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் மாட்டுத் தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றினால், அங்கிருந்த மின்வயர் ஒன்று அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது.

காப்பாற்ற முயன்றபோது நேர்ந்த துயரம்:
ஸ்ரீ கிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு, அவரைக் காப்பாற்ற ஆதிநாராயணன் மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி (79) ஆகிய இருவரும் ஓடிச் சென்று முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது:

இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஆதிநாராயணன் துடிதுடித்து உயிரிழந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணன் மதுரையில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த சின்னத்தம்பி தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை:
வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் கணேசன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt Bus Driver and College Student Die in Tragic Electrocution Near Madurai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->