அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து... 3 பேர் பரிதாபமாக பலி.!! - Seithipunal
Seithipunal


கோவை உப்பிலிபாளையம் அருகே அரசு பேருந்து, ஆட்டோவுடன்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

கோவை உப்பிலிபாளையம், மாதம்பட்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் அரசு பேருந்து நேற்று மாலை சௌரிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் தலை குப்புற கவிழ்ந்த நிலையில், ஆட்டோவில் பயணித்த இசக்கிமுத்து, கலைவாணன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 

மேலும் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகிலுள்ள பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து சிங்கநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus and auto accident in kovai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->