பேருந்து நிலையத்தில் சிகரெட் பிடித்த அரசு பள்ளி மனனவிகள் - சேத்தியாத்தோப்பில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவிகள், இரண்டு பேர் பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒருபுறம் மாணவிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஒருபக்கம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். 

மறுபுறம் தமிழகம் முழுவதுமே அரசுப் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கற்றல் திறனையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்த அரசு நிஜமாகவே நடவடிக்கை எடுக்கிறதா? இந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மோசமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government school students smoking in sethiyathope bus stand


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->