வண்டலூர் || பயணியை தாக்கிய ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த வண்டலூரில் மாநகர பேருந்தில் ஏறிய முதிய பயணி ஒருவரை ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்து, தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட முதிய பயணி மாநகர பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்து நடத்துனர் அந்த முதியவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

அதன் படி, தீவிர விசாரணைக்கு பிறகு மாநகர பேருந்தில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் தாக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government bus driver and conductor suspend for attack passenger in vandalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->