திடீரென பழுதான பிரேக் - தறிகெட்டு ஓடிய பேருந்து - பயணிகளின் நிலை என்ன?
government bus accident in chennai
சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை வள்ளலார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி 48 சி என்ற தடம் எண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து தங்கச்சாலை மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த பேருந்தின் ஓட்டுநர் பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதைப்பார்த்து பேருந்தின் உள்ளே இருந்த அலறியுள்ளனர். இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.
ஆனால், பெண் பயணி ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
government bus accident in chennai