2047ஆம் ஆண்டு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் - ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு..! - Seithipunal
Seithipunal


மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகம், அனைத்து இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு ஏற்பாட்டில் தென்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் பேசுகையில் உயர்கல்வியை மாற்றியமைக்க பாடுபட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கை மாற்றப்படுவதால் எந்த பலனும் கிடைக்கவில்லை அதற்குபதிலாக மாநிலங்கள் இடையே சமநிலையற்ற தன்மை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் ஆராய்ச்சி நாட்டுக்கும், மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க  வேண்டும் என தெரிவித்தார். மேலும், 2047ஆம் ஆண்டு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்கும் வகையில் நமது திட்டம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governer Says India should be at the forefront of the world year round


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->