குழந்தைகளுக்கு சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை சூட்டுங்கள்: சத்குரு யோசனை!
Give the names of Siddhars and Nayanmars to the children Satgurus suggestion
கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் மக்களுக்கென்று பிரத்யேகமாக சத்குரு வழிநடத்திய 'குருவின் மடியில்' எனும் தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், இறுதியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், "ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால் அதனை சுற்றியுள்ள கலாச்சார அம்சங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் . தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும். தமிழ் மொழி எங்கள் உயிர், மூச்சு என்று சொல்வதோடு நிற்காமல் சிலம்பம் போன்ற கலைகளை தமிழ் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும், அவர்களுக்குள் உருவாகும் கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் அவர்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.அதேபோன்று வெளியில் இருக்கும் சூழல்களை சமாளிக்க முயற்சிக்கும் முன்பு ஒவ்வொரு தனி மனிதர்களும் தங்களின் உள் சூழ்நிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் நேரமில்லை என்று மக்கள் தற்போது கூறுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சிகளை செய்கிறார். தமிழ் மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு நாளில் 7 நிமிடங்களாவது அவர்களின் மன நலத்திற்காக செலவிட்டு இந்த தியானத்தை செய்ய வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
English Summary
Give the names of Siddhars and Nayanmars to the children Satgurus suggestion