2 டன் எடை... 21 அடி உயரம்... கருப்பசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் புகழ்பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடாவெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கிடா வெட்டி கருப்பசாமிக்கு பொங்கல் வைப்பார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றை முன்னிட்டு நடைபெறாத இந்த திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திருவிழாவிற்கான எல்லா ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு கருப்பசாமிக்கு  பக்தர்கள் அரிவாலை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இதற்காக ஒரு டன் எடை மற்றும் 21 அடி உயரம் கொண்ட 
 இரண்டு அரிவாள் பூஜை செய்யப்பட்டு கிரேன் உதவியுடன்  கருப்பசாமி கோவிலில் நடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Giant sickles donated to Karuppasamy temple near Namakkal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->