வரும் 09-ஆம் தேதி அரசு பழங்குடியினர் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு..!
General transfer counseling for those who applied online for job transfer on the 9th
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 09-ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இந்திய கலந்தாய்வு கூட்டம் அந்தந்த மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம், பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
English Summary
General transfer counseling for those who applied online for job transfer on the 9th