இனி மினிமல் பேலன்ஸ்  பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது..பிரபல வங்கி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்றும்  ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.

இந்தியாவில்  சமீபத்தில் பிரபல பொதுத்துறை வங்கியான கனரா வங்கியும் கடந்த ஜூன் மாதம் , மினிமல் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்து இருந்தது.இந்த நிலையில்தான் , பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் பிடித்தம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த மாற்றத்தை கொண்டு வந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. 

பொதுவாக ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியம்,அதை   பராமரிக்காவிட்டால் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும் என்ற விதி வங்கிகளில் உள்ளன. இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதேபோல, மெட்ரோ நகரங்களுக்கு ஒரு வித கட்டணமும் சிறிய நகரங்களுக்கு ஒரு கட்டணமும் ஊரக பகுதிகளுக்கு ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சேமிப்பு கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக இது உள்ளது.இந்தநிலையில்தான் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்றும்  ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From now on, there will be no penalty for not maintaining a minimal balance announced a popular bank


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->