கோவை : நடந்துச் சென்ற மாணவி மீது கேக் தடவி அடித்த 4 இளைஞர்கள் கைது.!!
four youths arrested for attack school student in coimbatore
கோவை : நடந்துச் சென்ற மாணவி மீது கேக் தடவி அடித்த 4 இளைஞர்கள் கைது.!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் நான்கு இளைஞர்கள் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திடீரென, நடந்துச் சென்ற மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவியுள்ளனர். இதனை அந்த மாணவி தடுத்து, ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு இளைஞர்களும் சேர்ந்து அந்த மாணவியை அடித்து உதைத்துள்ளனர். இதனால், காயமடைந்த அந்த மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்களை கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட நான்கு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four youths arrested for attack school student in coimbatore