நான்காண்டு சாதனை விளக்க  பிரச்சாரக் கூட்டம்..திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறிய MLA ! - Seithipunal
Seithipunal


கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் செம்மொழி நாயகர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

ஒன்றியக் கழகச் செயலாளர் குணசேகரன் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ். கணேஷ்குமார் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர் எழும்பூர் கோபிநாத், இளம் பேச்சாளர் வி. வேல்முருகன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கலைஞரின் பெருமைகளையும், கழக அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர்.

சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களான இல்லம் தோறும் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, இந்திரா நகர் மாற்று குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்கியது உள்ளிட்ட சாதனைகளை விவரித்தார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாக்கியராஜ், கோபு, இலங்கேஸ்வரன், ராஜதுரை, பொருளாளர் ஆனந்த ஜோதி, ஏழுமலை, இராமவெங்கடேசன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ், வழக்கறிஞர் சிலம்பரசன், கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆனந்தன், தம்பி தர்மலிங்கம், கிளைக் கழக நிர்வாகிகள் கணேசன், சுப்ரமணியன், சுப்பராகவன், வேணுகோபால், வடிவேல், தயாளன், செந்தில்குமார், மணிகண்டன், பிரபு, வினோத் குமார், வசந்த் கிருஷ்ணன், இளங்கோ, சிவசங்கர், அய்யனாரப்பன், கோபால், பாலமுருகன், சையத் வாஜித், சக்திவேல், பழனிவேல், நடராஜன், சந்தானம், சுரேஷ், பூபதி, சிவக்குமார், கல்யாணசுந்தரம், ராமர், ராமநாதன், ஏகாம்பரம், சதாம்,கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Four-year achievement explanation campaign meeting MLA explaining the achievements of the DMK government


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->