கிருஷ்ணகிரி : தொழிலதிபரை காரில் கடத்தி நகை பறிப்பு - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி : தொழிலதிபரை காரில் கடத்தி நகை பருப்பு - 4 பேர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த எட்டாம் தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், சஞ்சீவி கடந்த 10-ந் தேதி அறையில் இருந்தபோது ஏழு பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்கு வந்து தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி சஞ்சீவியை அவரது காரில் கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து அவரை கோயம்புத்தூருக்கு கடத்தி வந்து, காந்திபுரத்தில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் என்று கூறிக் கொண்டு விசாரணை என்ற பேரில் சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

அதற்கு அவர் தன்னிடம் பணமில்லை ஏற்பாடு செய்து தருகிறேன் என்றுத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட அவர்கள் சஞ்சீவியிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தையும், அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், பத்து பவுன் கைச்செயின் மற்றும் 4 பவுன் மோதிரம் உள்பட மொத்தம் 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்துள்ளனர்.

இதையடுத்து அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே இறக்கிவிட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு பின்னர் அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர். 

இதைத்தொடர்ந்து சஞ்சீவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிறரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for gold and money robbery to business man in krishnagiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->