அமைச்சர்கள் -அரசு ஊழியர், ஆசிரியர்கள் பேச்சு வார்த்தையில் தோல்வி: ஜனவரி 06 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; ஜியோ அமைப்பு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டசபை தேர்தலின் போது 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 

இதனை நம்பி  தி.மு.க., வுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் ஆதரவு அளித்தன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையவுள்ளது. இன்னும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 03 பேர் கொண்ட குழுவினர், ஜாக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தோல்வியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் ஜனவரி 06-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தெரிவிக்கையில்; 

''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளித்துள்ளது. திட்டமிட்டபடி ஜனவரி 06 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும். லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.

அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை கருத்து கேட்பு கூட்டமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை அன்று சிறையில் இருந்த வரலாறு அரசு ஊழியர்களுக்கு உண்டு. பொங்கல் பண்டிகை நெருங்கும் போது கைது செய்தாலும் பரவாயில்லை. கடந்த 04 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது கூறியதையே தற்போதும் அமைச்சர் வேலு கூறுகிறார்.'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Following the failure of talks with the ministers the GEO organization has announced that an indefinite strike will be held from January 6th


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->