கார்த்திகை தீபம் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!
flower prices rise in karthigai deepam
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.
இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தை வளாகத்தில் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 400 முதல் 800 விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று கிலோ ரூ. 2500 ஆக விலை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக வியாபாரிகள் தெரிவித்திருப்பதாவது, தற்போது பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்கள் தேவைப்படுகிறது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களில் மகசூல் அதிகளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதம் முழுவதும் பனிக்காலம் என்பதால் பூக்களின் விலை ஏற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் மல்லிகை பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்
English Summary
flower prices rise in karthigai deepam