குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! மூன்றாவது நாளாக தொடரும் தடை...! அவதியில் சுற்றுலாப் பயணிகள்!
Flooding Courtallam ban continues third day Tourists trouble
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியதால் கடந்த மே மாத இறுதியிலேயே தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இதன காரணமாக தற்போது குற்றாலத்தில் முழுமையாக சீசன் களைகட்டி வந்தது. அவ்வகையில், ஐந்தருவி, சிற்றருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Flooding Courtallam ban continues third day Tourists trouble