#சென்னை || மின்சார வாரியத்தை கண்டித்து மீனவ மக்கள் நல சங்கம் போராட்டம்.!!
Fishermen People Welfare Association is protesting against TNEB
தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து சென்னை எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் 8 கிராமங்கள் உள்ள மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்புக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு தண்ணீர் பீச்சி அடிக்கக்கூடிய ராட்சத வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.

சென்னை எண்ணூர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம், காட்டுகுப்பம், எண்ணூர் குப்பம், எர்ணாவூர் குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் எண்ணூர் கொசஸ்தல ஆற்றில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது என கூறி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எண்ணூர் பகுதியில் முழுவதும் வியாபாரிகள் மீனவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தைத் தொடர்ந்துஎண்ணூர் அனல் மின் நிலையத்தை போராட்டக் குழு முற்றுகை இட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நினைவு வருகிறது.
English Summary
Fishermen People Welfare Association is protesting against TNEB