வங்கக்கடலில் உருவாகிறது "புயல்".! மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வதுபெறக்கூடும். 

இதனால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு - தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடலுக்குச் சென்று பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen instructed to return to the shore due to Storm forming in Bay of Bengal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->