வேலூர் || ஒன்றாம் வகுப்பு மாணவியை ஜன்னலில் கட்டி வைத்த ஆசிரியர் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வேலூர் || ஒன்றாம் வகுப்பு மாணவியை ஜன்னலில் கட்டி வைத்த ஆசிரியர் - காரணம் என்ன?

வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் சந்தைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். 

இதனால், கடந்த 4-ந்தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவி பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கயிறால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. 

ஆனால், இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாய் மறுப்புத் தெரிவித்து, "சிறுமி பள்ளிக்கு செல்லாததாலும் பள்ளியில் விட்ட பிறகு அடிக்கடி வகுப்பறையிலிருந்து வெளியே ஓடி வருவதாலும், நான் தான் கயிறு கட்டி வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை ஆசிரியர், மாணவி மற்றும் மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first class student tied window in vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->